அவ்வ்வ்வ்... என்று அழுவதை தவிர வேறு வழியே இல்லாமல் விழித்துக்கொண்டிருக்கிறார் வடிவேலு. சொந்தப்படம் எடுக்கிறேன். கதையை செதுக்குறேன்
என்று பிலிம் காட்டிக் கொண்டிருந்தாலும், நிஜம் ரொம்பவே சுடுகிறது
இவரையும், இவரது காமெடியை எல்லா நேரத்திலும் ருசித்துக் கொண்டிருக்கும் மகா
ஜனங்களையும்.
இந்த நேரத்தில்தான் கவிப்பேரரசு வைரமுத்துவின் பேட்டி, கம்பீரமாக நிமிர வைத்திருக்கிறது வடிவேலுவை. வடிவேலுக்காக பேச கோடம்பாக்கத்தில் ஒருவருமே இல்லையோ என்கிற மொட்டை சித்தாந்தத்தில் பெருத்த பாறாங்கல்லை போட்டு, சத்தமாக கேள்வி கேட்டிருக்கிறார் கவிப்பேரரசு.
வடிவேலு ஒரு பிறவிக் கலைஞன். உலக நடிகர்களுக்கு இணையானது அவரது உடல்மொழி. வட்டார வழக்கறிந்த மண்ணின் கலைஞன். அவரை திரையுலகம் மீண்டும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் நடிக்கவில்லைஎன்றால் நட்டம் அவருக்கல்ல, நமக்குதான் என்று கூறியிருக்கிறார் வைரமுத்து.
அதுமட்டுமல்ல, வைரமுத்து கூறியிருக்கும் இன்னொரு விஷயமும் கவனிக்கத்தக்கது. 'முதலமைச்சரோ, நண்பர் விஜயகாந்தோ அவருக்கு தடை விதித்திருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன். படத்தயாரிப்பாளர்கள் அவரை மீண்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வடிவேலுவும் தயாரிப்பாளர்களின் பொருளாதாரம் அறிந்து ஒத்துழைக்க வேண்டும்' என்று அப்பேட்டியில் கூறியிருக்கிறார் கவிப்பேரரசு.
இந்த பேட்டியை படித்துவிட்டு வைரமுத்துவுக்கு போன் செய்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டாராம் வடிவேலு.
நன்றி - tamilcinema.com

Venus makes a move across face of Sun

0 comments:
Post a Comment