Rajapattai movie Songs Released | "3" Movie Trailer released | 54th Grammy Awards Nominees | Watch Aravaan official trailer | Osthi songs released |Superstar's next movie| Karthi's next movie named "Kagitha Kappal" with Rajesh | Skype Officially Belongs to Microsoft Now | அழிந்து வரும் சிட்டுக்குருவி |Osthi new trailer for diwali | 7m Arivu Songs released| Vedi songs released | Google Accidentally Posts Video Tour of New Gmail | 36 Megapixel (7360 x 4912) Nikon D800 Pictured |

Tuesday, November 22, 2011

இவ்வருடத்தின் மோசமான கடவுச் சொற்கள்: உங்களுடையதும் உள்ளதா?

இவ்வருடத்தின் மோசமான கடவுச்சொற்களைப் பிரபல நிறுவனமொன்று வெளியிட்டுள்ளது.

கடவுச்சொற்களை முகாமைத்துவம் செய்யும் அப்ளிகேஷனை உருவாக்கும் நிறுவனமொன்றே இவற்றை வெளியிட்டுள்ளது.

பரந்த ஆய்வொன்றின் அடிப்படையிலேயே குறித்த நிறுவனம் இவ் அறிக்கையொன்றினைத் தயாரித்துள்ளது.

அதன்படி அதிகமாக ஹெக்கிங் செய்யப்பட்ட கடவுச் சொற்கள் இதோ.

1. password

2. 123456

3. 12345678

4. qwerty

5. abc123

6. monkey

7. 1234567

8. letmein

9. trustno1

10. dragon

11. baseball

12. 111111

13. iloveyou

14. master

15. sunshine

16. ashley

17. bailey

18. passw0rd

19. shadow

20. 123123

21. 654321

22. superman

23. qazwsx

24. michael

25. football

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கடவுச்சொற்களின் முக்கியத்துவம் குறித்து அதிகமாக வலியுறுத்தப்படுகின்ற போதிலும் பலர் அதுதொடர்பில் அக்கறை கொள்வதில்லையென அவர் தெரிவிக்கின்றார்.

இதன் மூலம் அவர்கள் மட்டுமன்றி அவர்களது நண்பர்களும், உறவினர்களும் பாதிக்கப்படுகின்றனர், உதாரணமாக உங்கள் மின்னஞ்சல் கணக்கு அல்லது சமூக வலையமைப்புகளில் வேறு ஒருவர் நுழைந்து அவசரமாக பணம் அனுப்பும் படியும் அவசரத்தில் இருப்பதாகவும் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் கோரினால் அவர்களும் பணம் அனுப்பத்தயங்குவதில்லை.

இத்தகைய சந்தர்ப்பத்தில் உங்களுடன் சேர்த்து அவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே தான் கடவுச் சொல்லை உறுதியானதாக அதாவது எண்கள், எழுத்துக்கள் மற்றும் இதர குறியீடுகளின் கலவையாக உருவாக்கும்படியும் அதனை 6 மாதத்திற்கு ஒரு தடவை மாற்றும் படியும் வலியுறுத்தப்படுகின்றது.    
 



நன்றி-வீரகேசரி

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Newspapers