Rajapattai movie Songs Released | "3" Movie Trailer released | 54th Grammy Awards Nominees | Watch Aravaan official trailer | Osthi songs released |Superstar's next movie| Karthi's next movie named "Kagitha Kappal" with Rajesh | Skype Officially Belongs to Microsoft Now | அழிந்து வரும் சிட்டுக்குருவி |Osthi new trailer for diwali | 7m Arivu Songs released| Vedi songs released | Google Accidentally Posts Video Tour of New Gmail | 36 Megapixel (7360 x 4912) Nikon D800 Pictured |

Friday, January 20, 2012

The Dirty Picture (டர்டி பிக்சர்) விமர்சனம்

ஒரு சாதாரண மேக்கப் பொண்ணு எப்படி நடிகை ஆகி வருவதென்பதை நாகரீகமாக சொல்லியிருக்கும் படம் தான் இந்த "dirty picture ".80 களின் தமிழ் திரையுலகை களமாக  கொண்டு சில்கின் வாழ்க்கை தழுவல்தான் டர்டி பிக்சர். ஆனால் முழுக்க முழுக்க உணமைக் கதையாய் இல்லாமல் சினிமாவுக்கேற்ற கற்பனைகளை கலந்திருப்பது விசேஷம். ஆரம்ப டைட்டிலிலேயே "நாக்க முக்க " என்ற பாட்டின் மூலம் தமிழ் படமாக மாற்றி, தமிழுக்கும் இந்தப் படத்திற்கும் உள்ள உறவினை சொல்லாமல் சொல்லிவிடுகிறார்கள்இவ்வளவு Easyஆக இந்த கதாபத்திரத்தை எடுத்து நடித்திருக்கும் வித்யா பாலனின் நடிப்பும் சூப்பர், துணிச்சலும் சூப்பர். நசிருதீன் ஷா வயதான வக்ரமான ஹீரோ பாத்திரத்தை அவ்வளவு நுணுக்கமாக செய்திருக்கிறார். பெயர் சூர்யகாந்த் என வைத்து ரஜினியை கிண்டல் செய்கிறார்களோ என நினைக்க வைத்தாலும்நசிருதீன் கதாபாத்திரம் அந்தக் கால திலக நடிகரின் சாயல்தான் என அப்போதைய கிசுகிசுக்கள் அறிந்தவர்களுக்கு தெரியும் கிட்டத்தட்ட சில்க் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் வித்யா பாலன்,  வல்கரான டயலாக் ஆகட்டும், கிளுகிளுப்பான உடலசைவாகட்டும்எந்த Inhibitionம் இல்லாமல் அவ்வளவு அருமையாகநடித்திருக்கிறார்.



"ஐநூறு பொண்ணுங்க கிட்ட நீங்க நினைச்சா போகலாம். ஆனா ஒரே பொண்ணு கிட்ட நீங்க ஐநூறு வாட்டி போயிருக்கீங்களா ? என்ற Dialogகளும் படத்தின் Hitக்கு ஒரு காரணம் தான்.  .நசிரூதீன் ஷாவின் பயந்த தம்பியாககதாசிரியராக வரும் துஷார் மற்றவர்களின் நடிப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறுகிறார்



இமரான் வித்யாவின் கதை, அதாவது மோதலில் ஆரம்பித்து குடியில் முடியும் அவர்கள் உறவு வெள்ளித்திரையில் இதுவரை சொல்லப்படாததுOverall First halfல் விறுவிறுப்பாக போகும் படம் Second Halfல் தொய்வு பெறுகிறது. இருந்தாலும், கடைசி காட்சிகள் பரவாயில்லை. ஒரு சென்சிடிவான சப்ஜக்டை மிக அழகாக எல்லை தாண்டாமல் இயக்கியிருக்கிறார் மிலன் . ஆனால் சினிமாவின் வீக்னெஸ்ஸை சொல்லிக் கொண்டே  Second Halfல்   இவரும் சில  Compromise செய்தது கொஞ்சம் கேவலம். "சினிமாவுக்கு முக்கியம் மூன்று Entertainment , Entertainment, Entertainment" என்ற வரிகளின் மூலம் 1980களின் சினிமாவை பற்றி சொல்லாமல் சொல்லியிருக்கும் இயக்குனருக்கு ஒரு சபாஷ். அத்தகைய கால கட்டத்தில் ஒரு புரட்சியை உண்டு பண்ண துடிக்கும் ஒரு இளம் இயக்குனரின் கதாபாத்திரம் இம்ரானுக்கு."ஒரு வேளை Shakespeare ஓட tragedy எனக்கு நடக்குதோ  எண்ணு தோணுது உன்னோட சண்ட போட்ட நான் உனக்காக சண்ட போட ஆரம்பிச்சுட்டன் ? " என்று Shakespeare இன் வாழ்கையை ஒரேயொரு வசனத்தில் சொன்னது பிரமாதம். எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவரை விமர்சிக்கிறோமோ  அவ்வளவுக்கு அவர் வளர்ந்து போவார் என்ற உண்மையை சொல்லியிருக்கிறார்கள் .அதற்கு உதாரணம் இந்த காலத்தில் தங்களுக்கு தாங்களே கிசு கிசு பரப்பும் நடிகைகள் தான். கதையில் "ஷகிலா" என்ற பெயரில் வரும் கதாபாத்திரம் அந்த கால Disco shanthiயை ஞாபகபடுத்துகிறார். மொத்தத்தில் இந்த படம், க்ளாமர் மட்டும் நம்பி சினிமாவுக்குள் அதுவும் குறிப்பாக தமிழ் சினிமாக்குள் வரும் நடிகைகளுக்கு சாட்டையடி. dirty picture நல்ல முயற்சி. 

இப்படிக்கு,
சிற்பி  


0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Newspapers