Rajapattai movie Songs Released | "3" Movie Trailer released | 54th Grammy Awards Nominees | Watch Aravaan official trailer | Osthi songs released |Superstar's next movie| Karthi's next movie named "Kagitha Kappal" with Rajesh | Skype Officially Belongs to Microsoft Now | அழிந்து வரும் சிட்டுக்குருவி |Osthi new trailer for diwali | 7m Arivu Songs released| Vedi songs released | Google Accidentally Posts Video Tour of New Gmail | 36 Megapixel (7360 x 4912) Nikon D800 Pictured |

Saturday, July 7, 2012

சகுனி விமர்சனம் (Saguni Review)

பில்லா இல்லாத சந்தோசத்தில் கிட்டத்தட்ட 1000க்கு மேற்பட்ட தியேட்டர்களில் களமிறங்கியிருக்கிறது சகுனி.சிம்பிள் கதை. நம்பக்கூடிய லாஜிக்.


காரைக்குடியில் உள்ள கார்த்தியின் ஒரே சொத்து, ஒரு பூர்வீக வீடு. அதையும் ரயில்வே திட்டத்துக்காக இடிக்கப் பார்க்கிறது அரசு. இந்த வீட்டை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை வரும் கார்த்தி, அமைச்சரிடம் மனு கொடுக்க, அது வழக்கம்போல 'போக வேண்டிய' இடத்துக்குப் போகிறது!


முதலமைச்சரிடம் போனால் நியாயம் கிடைக்கும் என்று போகிறார்... அங்கே உருவாகிறது பகை. 


தன் வீட்டை மீட்க வேண்டுமானால் முதலில் முதல்வரை வீழ்த்த வேண்டும்... அதற்கான அரசியல் ஆட்டத்தை சகுனியின் சாமர்த்தியத்தோடும், கண்ணனின் மனிதாபிமானத்தோடும் ஆடுகிறார் கார்த்தி. ஆட்டத்தில் அபாரமாய் வெல்லும் அவர் கடைசியில் அரசியல்வாதியாகிறாரா? என்பது கிளைமாக்ஸ்.
இதுவரை விடலை பையனாக நடித்து வந்த கார்த்தியின் முகத்தில் ஒரு மெச்சூரிட்டி தெரிகிறது. அந்த மெச்சூரிட்டி தான் எந்த வித அரசியல் சாணக்கியமாக முடிவெடுக்கும் போதும் நம்பக்கூடியதாக இருக்கிறது.
சந்தானமும் கார்த்தியும் ரஜினி கமலாக அறிமுகமாகிறார்கள். சந்தானத்திடம், தான் சென்னைக்கு வந்த கதையை கார்த்தி சொல்லும் விதமும் அதை சந்தானம் தனது பாணியில் கலாய்ப்பதும் இதுவரை தமிழ் சினிமாவில் வராத ஒரு ரசிக்ககூடிய விடயம்.கார்த்தி, சந்தானம் நல்ல combination.

இட்லிக்கார ஆச்சி ராதிகா, மேயராக பதவி ஏற்க ஒவ்வொரு படிக்கட்டில் கால் வைக்கும்போதும், அவரது கடந்த காலம் நினைவில் வந்துபோவது சூப்பர். எல்லா அரசியல் தலைவரும் பதவி ஏற்கும்போதும், மோசமான உத்தரவுகளில் கையெழுத்திடும்போதும் இப்படி ப்ளாஷ்பேக் கொஞ்சம் எட்டிப்பார்த்தால், அவர்களின் மனசாட்சி சாகாமலாவது இருக்கும்!


ரசிக்கும்படி காட்சிகள் நிறைய இருந்தாலும், அவற்றை ஒரேயடியாகத் திணித்துவிட்டதுபோன்ற உணர்வு. Editor கொஞ்சம் சறுக்கி விட்டார் என்றே சொல்லவேணும். படம் கொஞ்சம் நீளம் என்ற எண்ணம் இன்னும் இருக்கிறது,Commercial படம் வேறு.


G.V.பிரகாஷ்குமார் இசையில் பாடல்கள் ஓகே. அதுவும் 2 பாடல்கள் Double OK. மனசெல்லாம் பாடலுக்கு இசையமைத்த G.Vக்கும் படமாக்கிய முத்தையாவுக்கும் Special Clap. 


சின்ன சின்ன சறுக்கல்கள் இருந்தாலும் படம் ஓகே. குடும்பத்துடன் பார்க்கலாம்.


இப்படிக்கு,
சிற்பி



0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Newspapers