அண்மையில் சன் டிவியில் "வாங்க பேசலாம்" என்ற ஒரு நிகழ்ச்சி பார்த்தேன் . தினமும் ஏதாவது ஒரு தலைப்பில் பேசிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி அது. பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்கையில் இப்படி உட்கார்ந்து கதைப்பது என்பது மிக மிக அரிது. அப்படி பட்ட சந்தர்பங்களில் இப்படி பட்ட நிகழ்ச்சிகள் வரவேற்கத்தக்கன.அன்றைய தினம் முற்றிலும் பறவைகளை பற்றியது . அதிலும் சிறப்பாக என்னை கவர்ந்தது சிட்டு குருவி பற்றியது. ஒரு காலத்தில் எங்களது வீட்டுக்கு அழையா விருந்தாளியாக எங்கள் வீட்டு முகப்புகளிலும், திண்ணைகளிலும் , வீட்டு தாழ்வாரத்திலும் கூடு கட்டி வாழும் இந்த பறவைகள் இப்போ இருந்த சான்றே இல்லை எனலாம். அந்த அளவுக்கு அருகிவிட்டது இந்த இனம். அதுவும் அதன் அழிவு வீதம் கடந்த 5 ஆண்டுகள் மிகவும் அதிகம் என்றே புள்ளி விபரங்கள் கூறுகின்றன. மிகவும் எளிமான இந்த பறவை பருமனில் மிக சிறியது.
இன்னும் ஞாபகம் இருக்கிறது எனக்கு ஒரு 10 வயது இருந்த காலப்பகுதிகளில் வீட்டில் ஒரு card board பெட்டியில் கொஞ்சம் தும்புகளை போட்டு மேலே தொங்க விடுவது வழக்கம். அது சிட்டு குருவிகள் வந்து தங்குவதற்காகும். புதுசா ஒரு வீடு வாடகைக்கு மாறி செல்லும் போது பொய் கொஞ்ச நாள் வீடு வெறிச்சோடி போய் இருக்கும். ஒரு சில நாட்களின் பிறகு அழையா விருந்தாளியாக வரும் இந்த பறவைக்காக ஒரு card board பெட்டி மேலே தாழ்வாரத்தில் ஏறிவிடும். அனால் காலப்போக்கில் நாகரீக மாற்றத்தாலும் நேர மிச்சமின்மயாலும் இந்த வழக்கமும் ஏன் இந்த பறவையை பற்றியே மறந்து போய்விட்டது.
மிக வேகமாக அழிந்து வரும் இனங்களில் இதுவும் ஒன்றாகும். அதிகரித்துவரும் தொலைபேசி பாவனை இதற்கு ஒரு காரணம் என்று ஒரு கண்டுபிடிப்பு இருந்தது. தமிழர்களுக்கு காப்பாத்த தெரியாது ஆனால் கண்டுபிடிக்க மட்டும் தெரியும் என்று கேட்பது எனக்கு விளங்குது. என்ன செய்ய ? காலம் அப்படி. தொலைபேசி பாவனையால் வெளிவரும் ஒரு வித கதிர்ப்பு (radiation) அதன் அழிவுக்கு காரணம் என்றே சொல்லப்பட்டது. ஆனால் சமீபத்தில் ஒரு வலைதளத்தில் (blog) நான் படித்தது ஞாபகம் வந்தது , "நான் எல்லா இடத்திலும் கண்டதை விட அமெரிக்காவில் (America) அதிக சிட்டுக்குருவிகளை கண்டேன் " என்று அந்த பதிவின் ஆசிரியர் குறிப்பிட்டிருந்தார். அப்படி என்றால் நாகரீக மோகம் மிக்க அந்த நாட்டில் மட்டும் எப்படி இவை இருக்கும். அங்கு இந்த radiation எல்லாம் இல்லையோ? இனங்கள் அழிவதற்கு நாங்கள் தான் காரணம் அதுவும் குறிப்பாக இந்த இனம் அழிவதற்கு எமது நாகரீக வளர்ச்சியும் எமது அலட்சிய போக்கே காரணமாகும். முற்றும்......
அன்புடன் ,
நான் சிற்பி
1 comments:
நன்று
Post a Comment