Rajapattai movie Songs Released | "3" Movie Trailer released | 54th Grammy Awards Nominees | Watch Aravaan official trailer | Osthi songs released |Superstar's next movie| Karthi's next movie named "Kagitha Kappal" with Rajesh | Skype Officially Belongs to Microsoft Now | அழிந்து வரும் சிட்டுக்குருவி |Osthi new trailer for diwali | 7m Arivu Songs released| Vedi songs released | Google Accidentally Posts Video Tour of New Gmail | 36 Megapixel (7360 x 4912) Nikon D800 Pictured |

Monday, January 16, 2012

நண்பன் | திரை விமர்சனம்

ஹிந்தியில் சக்கை போடு  போட்ட "3idiots " படத்தினுடைய remake தான் இந்த நண்பன். அடிக்கடி அரசியல் வசனங்களை தனது படங்களில் பேசி தனது அரசியல் பிரவேசத்தை சொல்லாமல் சொல்லும் நடிகர் விஜய், 'மச்சி, ஒரு குவார்ட்டர் சொல்லேன்' என்கிற ஜீவா , வாய்ப்பே இல்லாமல் இருந்த ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று பேரை பற்றிய கதையே ஷங்கரின் நண்பன். நண்பன் விஜய்யை தேடி கல்லூரி பழைய நண்பர்களான ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன் மூவரும் போகிறார்கள். கூடவே விஜய்யின் காதலி இலியானாவும் ஒட்டிக் கொள்கிறார். அவரது முகவரியில் போய் பார்த்தால் அங்கு விஜய் பெயரில் இருப்பது எஸ்.ஜே.சூர்யா. இவருக்காக அவர் பரீட்சை எழுதியிருக்கிறார் என்பதும், பணக்கார சூர்யாவுடைய வேலைக்காரர் மகன்தான் விஜய் என்பதும் தெரியவர, விஜய்யை தேடுகிறது நண்பன் வட்டாரம். அவர் என்னவானார் என்பதுதான் முடிவு.

 punch dialog , பறந்து பறந்து அடிக்கும் சண்டை கட்சிகள் நிறைந்த விஜயின் சாதாரண படங்களை போல் இல்லாமல் புதுமுக ஹீரோக்கள் மாதிரி சாதாரணமாக வரும் விஜய் எந்த இடத்திலும் நம்மை அலுக்க விடவில்லை. என்னை பொறுத்த வரை சச்சின், காவலன் வரிசையில் நண்பனையும் சேர்க்கலாம் போல தோணுது.விஜய் தான் இப்படி என்று பார்த்தா அவருக்கு சரி நிகராக, தனக்கே உரிய இயல்பான பாணியில் ஜீவாவும், வாய்ப்பில்லாமல் இருந்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கும் ஸ்ரீகாந்தும் நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார்கள் . 2 நிமிட காட்சி என்றாலும் S.J.Surya தனது வேலையை சரியாகவே செய்திருக்கிறார்.



 ஹிந்தியில்  Omi Vaidya வின் பாத்திரத்தில் தமிழில் தனது இயல்பான நடிப்பை வெளிக்காட்டி இருக்கும் சதயனது நடிப்பு பாராட்ட வேண்டியது.முரட்டு வாத்தியாராக வருகிற சத்யராஜ் மாணவர்களை படுத்துகிற சம்பவங்களும், போடுகிற தில்லாலங்கடி ரூட்டுகளும் அதிர்ச்சி ரகம். Boman Irani "3 idiots" இல் நடித்ததை போன்று நடித்திருக்கும் சத்யராஜ் சில இடங்களில் தனது இயல்பான பணியை புகுத்தியிருக்கிறார். விஜயின் நடனத்தை எதிர்பார்த்து போனவர்களுக்கு சற்று ஏமாற்றம் தான். 


"இருக்கனா" படலை புகுத்த வேண்டிய இடத்தில் புகுத்தி இருக்கும் ஷங்கருக்கு ஒரு சபாஷ். பாடல்களை படமாக்குவதில் கில்லாடியான ஷங்கர் "asku laska" பாடலுக்கு சிரமம் எடுத்தது போன்று "இருக்கனா" பாடலுக்கும் கொஞ்சம் சிரமம் எடுத்திருக்கலாம்.  "asku laska"  பாடல் மூலம் தான் ஒரு Melody king என்று ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் நிருபித்து இருந்தாலும்பின்னணி இசையில் கொஞ்சம் கோட்டை விட்டுவிட்டார் என்று தான் சொல்ல வேணும். "ஏ.ஆர்.ரகுமானோட அப்பா அவரை கிரிக்கெட் கத்துக்க சொல்லி கட்டாயப்படுத்தி,...டென்டுல்கரோட அப்பா அவரை மியூசிக் டைரக்டரா ஆகச்சொல்லி கட்டாயப்படுத்தி இருந்தா என்ன ஆகியிருக்கும்...?" என்ற வைர வசனங்களோடு, "asku laska" பாடலில் 16 மொழிகளில் காதல் என்ற சொல்லின் அர்த்தங்களை சொல்லிய  மதன் கார்க்கியை பாராட்டவேண்டும். remake மன்னர்கள் என்ற வரிசையில்  விஷ்ணு வர்தன் , ராஜா  போன்றோருக்கு அடுத்தபடியாக  நண்பன் படம் மூலம் புதிதாக ஷங்கரும் சேர்ந்திருக்கிறார். எது எப்படி இருந்தாலும் இம்மாதிரியான ரீமேக் படங்களை எடுக்கும் போது ஷங்கரின் கற்பனாசக்தி அதாவது Creativity கொஞ்சம் குறைகிறதோ எண்டொரு Feeling. எதோ வந்தோம் பாட்டுக்கு டான்ஸ் ஆடினோம் என்று மற்றைய heroine மாதிரி இல்லாமல் நடிப்புக்கு சற்று முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார் படத்தின் கதாநாயகி இல்லியானா.  மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவும், ஆன்டனி(Anthony) யின் Editing உம் தியேட்டரில் படத்தை மெய்மறந்து பார்க்க வைக்கின்றன. இருந்தாலும் remake படம் என்பதால் Editor ஆன்டனிக்கு பாடல்களை தவிர மற்றைய இடங்களில் கொஞ்சம் வேலை இல்லாமல் போய்விட்டது எனலாம்.
மொத்தத்தில் நண்பன் all is double well .

இப்படிக்கு,
சிற்பி 




-Panel Sytpi - 

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Newspapers